தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தேசிய துப்பாக்கி சுடுதல் கொளத்துார் வீரர் தகுதி

 தேசிய துப்பாக்கி சுடுதல் கொளத்துார் வீரர் தகுதி

 தேசிய துப்பாக்கி சுடுதல் கொளத்துார் வீரர் தகுதி


ADDED : டிச 01, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தென் மண்டல துப்பாக்கி சுடுதலில், இரட்டை தங்கம் வென்ற சென்னை வீரர் இளங்குமரன், டில்லியில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

என்.ஆர்.ஏ.ஐ., எனும் இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் சார்பில், 16வது தென் மண்டல துப்பாக்கி சுடுதல் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டி, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. போட்டியில், தென் மாநில அளவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், சென்னை கொளத்துாரை சேர்ந்த கே.இளங்குமரன், 47, மாஸ்டர் பிரிவில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினார்.

இவர், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' மற்றும் 50 மீ., 'ப்ரீ பிஸ்டல்' ஆகிய இருபிரிவிலும் தலா ஒரு தங்கம் வென்றார். இந்த வெற்றியால், டில்லியில் வரும் 11 முதல் 24ம் தேதி வரை நடக்க உள்ள, அகில இந்திய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

முன்னதாக, சென்னையில் நடந்த மாநில போட்டியில் இளங்குமரன், மூன்று தங்கம், இரண்டு வெள்ளி பதக்கம் வென்றிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us