/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய பல்கலை 'கிக் பாக்சிங்' சென்னை மாணவர்கள் அசத்தல்
/
தேசிய பல்கலை 'கிக் பாக்சிங்' சென்னை மாணவர்கள் அசத்தல்
தேசிய பல்கலை 'கிக் பாக்சிங்' சென்னை மாணவர்கள் அசத்தல்
தேசிய பல்கலை 'கிக் பாக்சிங்' சென்னை மாணவர்கள் அசத்தல்
ADDED : மார் 26, 2025 11:55 PM

சென்னை,அகில இந்திய பல்கலை கிக் பாக்சிங் போட்டியில், சென்னையை சேர்ந்த சுபாஷினி மற்றும் சையத் ஷாதிக் பதக்கங்களை வென்றனர்.
அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, உத்தரபிரதேசம், மீரட் நகரில் உள்ள சுவாமி விவேகானந்தர் சுபர்தி பல்கலையில், கடந்த 21ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில், நாடு முழுதும் உள்ள, 80 பல்கலைகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், பெண்களுக்கான 55 கிலோ எடை 'லோவ் கிக்' பிரிவில், தமிழக வீராங்கனையான, சென்னை இந்துஸ்தான் பல்கலை மாணவி எஸ்.சுபாஷினி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
அதேபோல், ஆண்களுக்கான 79 கிலோ எடை 'லோவ் கிக்' பிரிவில், தமிழக வீரரான எம்.ஜி.ஆர்., பல்கலை மாணவர் ஒய்.சையத் ஷாதிக் வெள்ளி பதக்கம் வென்றார்.