/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுங்கம்பாக்கத்தில் இன்றும், நாளையும் இயற்கை சந்தை
/
நுங்கம்பாக்கத்தில் இன்றும், நாளையும் இயற்கை சந்தை
ADDED : மே 17, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை விற்கும் வகையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள, அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், இன்றும், நாளையும் இயற்கை விற்பனை சந்தை நடத்தப்படுகிறது.
பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருட்கள், கீரைகள், காய்கறிகள், பழ வகைகள், பனை ஓலைப் பொருட்கள் உள்ளிட்டவை விற்கப்பட உள்ளது.
இவ்வாறு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.