/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நங்கநல்லுாரில் நவக்கிரக மஹா யக்ஞ மகோத்சவம்
/
நங்கநல்லுாரில் நவக்கிரக மஹா யக்ஞ மகோத்சவம்
ADDED : அக் 01, 2025 12:01 AM
சென்னை, உலக நன்மைக்காக, நவக்கிரக மஹா யக்ஞ மகோத்சவம், நங்கநல்லுாரில் உள்ள ஷீரடி சாய்பாபா குரு தியான கூடத்தில், மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது.
நவக்கிரக அருளை வேண்டியும், உலக அமைதிக்காகவும், நவக்கிரக மஹா யக்ஞ மகோத்சவம், நங்கநல்லுார், தில்லை கங்கா நகர் 24வது தெருவில் உள்ள ஷீரடி சாய்பாபா குரு தியான கூடத்தில் வரும், 3 முதல் 5ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
நவக்கிரகங்களுக்கு உகந்த புஷ்பம், பழம், ரத்தினம், சமித்து, நவக்கிரக தேசத்திலிருந்து மிருத்திகை, தீர்த்தம், நிவேதனம், தானம், வாஹனம், கந்தம், ராகம், உலோகம், வஸ்திரம், தானியங்கள் முதலான திரவியங்களைக் கொண்டு வேத சூத்திரங்களை ஆதாரமாக வைத்து, வேத பண்டிதர்களால் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி, வரும் 3ம் தேதி மாலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 4ம் தேதி காலை கோ பூஜை, மகா கணபதி ஹோமம், மகா விஷ்ணு லட்சார்ச்சனை, சகஸ்ரநாமம், நவக்கிரக தேவதா ஜபம் உள்ளிட்டவை நடக்கின்றன.
இறுதி நாள் நவக்கிரக மகா யக்ஞம், மகா பூர்ணாஹுதி நடத்தப்படுகிறது.