/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நிறைவு
/
வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நிறைவு
ADDED : அக் 13, 2024 02:31 AM

திருவொற்றியூர்:வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா, கொடியிறக்கத்துடன் நிறைவுற்றது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு, உற்சவ தாயார் தபசு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்தார்.
விழா நாட்களில் பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமா மகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, மகிஷாசூர மர்த்தினி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் எழுந்தருளி, மாடவீதி உற்சவம் நடந்தது.
நிறைவு நாளான நேற்றிரவு உற்சவ தாயார், மதுரை மீனாட்சியாக எழுந்தருளி, மாட வீதி உலா கண்டார். பின், தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கத்துடன், நவராத்திரி திருவிழா நிறைவுற்றது.