/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நவராத்திரி கொலு கண்காட்சி சிறப்பு விற்பனை துவக்கம்
/
நவராத்திரி கொலு கண்காட்சி சிறப்பு விற்பனை துவக்கம்
நவராத்திரி கொலு கண்காட்சி சிறப்பு விற்பனை துவக்கம்
நவராத்திரி கொலு கண்காட்சி சிறப்பு விற்பனை துவக்கம்
ADDED : அக் 03, 2024 12:21 AM

சென்னை, காந்தியடிகளின் 156வது பிறந்தநாளையொட்டி, பாரிமுனையில் கொலு கண்காட்சி, விற்பனை மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
விழாவை பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்.
பாரிமுனையில் உள்ள குறளகம் கதர் அங்காடியில் துவங்கிய இந்த கண்காட்சியில், காந்தியடிகளின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில்,''கடந்த ஆட்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்த கதர் விற்பனை, தற்போது 20 கோடிக்கு மேல் நடக்கிறது.
இந்த கட்டடத்தை இடித்து, புது கட்டடம் எழுப்பப்பட உள்ளது. மொத்தம் 11 மாடிகள் அளவில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது,'' என்றார்.
கதர் துறையின் அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை வகித்து, இந்த ஆண்டில் சிறப்பு பருத்தி சேலைகள், புவிசார் குறியீடு பெற்ற மதுரை சுங்குடி பருத்தி சேலைகள், மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்ட பண, ஆபரணப் பெட்டிகள் ஆகியவற்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.
சிறந்த நுாற்பாளர், கதர் நெசவாளர் மற்றும் பட்டு நெசவாளர்கள் மூன்று பேருக்கு ஊக்கப்பரிசாக 25,000 ரூபாய்க்கான காசோலைகளும், நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. இங்கு, 28க்கும் மேற்பட்ட அரங்குகள் விற்பனைக்காக அமைக்கப்பட்டிருந்தன.