/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிச., 14ல் கடற்படை சார்பில் முதல் முறையாக மாரத்தான்
/
டிச., 14ல் கடற்படை சார்பில் முதல் முறையாக மாரத்தான்
டிச., 14ல் கடற்படை சார்பில் முதல் முறையாக மாரத்தான்
டிச., 14ல் கடற்படை சார்பில் முதல் முறையாக மாரத்தான்
ADDED : நவ 05, 2025 01:23 AM
சென்னை: இந்திய கடற்படை சார்பில், சென்னையில் முதன் முறையாக, டிச., 14ல், 'சென்னை அரை மாரத்தான்' என்ற பெயரில் மாரத்தான் நடக்கிறது. இந்த மாராத்தான் ஏற்கனவே மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.
'மாரத்தான் ஐ.என்.எஸ்., அடையாறு' என்ற பெயரில், 21.1 கி.மீ., துாரமும், 'ஐ.என்.எஸ்., பருந்து' என்ற பெயரில் 10 கி.மீ., துாரமும், 'ஐ.என்.எஸ்., பல்லவா' என்ற பெயரில், 5 கி.மீ., துாரமும் மாரத்தான் நடக்கிறது. ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் மட்டுமே பங்கேற்க முடியும்.
சென்னை நேப்பியர் பாலம் அருகே துவங்கி, ஐ.என்.எஸ., அடையாறு கடற்கரையில் மாராத்தான் முடிவடையும். கூடுதல் விபரங்களை, chennainavyhalfmarathon.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மாராத்தானுக்கான அதிகாரப்பூர்வ, 'டி ஷர்ட்'டை, இந்திய கடற்படையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை மூத்த அதிகாரி, கமடோர் சுவரத் மாகோன் வெளியிட்டார்.
பின், சுவரத் மாகோ கூறியதாவது:
சென்னை அரை மாரத்தான் ஒரு மாரத்தான் மட்டுமல்ல; அது, உடற்பயிற்சி, தேசம் குறித்த பெருமை ஆகியவற்றை வெளிப்படுத்துவதுடன், மக்களை ஒன்றிணைக்கும் ஒரு இயக்கம்.
போதை இல்லாத இந்தியா, மகளிர் சக்தி மற்றும் சூதாட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு ஆகியற்றை ஆதரிப்பது, இந்த ஓட்டத்தின் பங்கேற்போரை, சிறந்த மாற்றத்திற்கான துாதராக மாற்றும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

