/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீலாங்கரையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
/
நீலாங்கரையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
ADDED : பிப் 01, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், ஆலிவ் கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 50. கடந்த மாதம் 23ம் தேதி, குடும்பத்துடன் வெளிநாடு சென்றார். நேற்று காலை, வீட்டு காவலாளி முதல் மாடிக்கு சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
பீரோவில் இருந்த, 20 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. நீலாங்கரை போலீசாரின் விசாரணையில் நேபாளத்தைச் சேர்ந்த நபர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவரை பிடிக்க தனிப்படை போலீசார், நேபாளம் விரைந்துள்ளனர்
மேலும், வெளிநாடு சென்ற ராஜேஷ்குமார் வந்தபின், வேறு எதாவது பொருட்கள் திருடப்பட்டதா என தெரியவரும் என, போலீசார் கூறினர்.