/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குறைந்த கட்டணத்தில் கற்க 'எட்சார்' தளத்தில் 'நீட்' பயிற்சி
/
குறைந்த கட்டணத்தில் கற்க 'எட்சார்' தளத்தில் 'நீட்' பயிற்சி
குறைந்த கட்டணத்தில் கற்க 'எட்சார்' தளத்தில் 'நீட்' பயிற்சி
குறைந்த கட்டணத்தில் கற்க 'எட்சார்' தளத்தில் 'நீட்' பயிற்சி
ADDED : செப் 28, 2025 02:55 AM

சென்னை:குறைந்த கட்டணத்தில், 'நீட்' தேர்விற்கு எளிதான முறையில் பயிற்சி மேற்கொள்ள, 'எட்சார்' தளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
முன்னாள் ஐ.ஜி., எம்.ராமசுப்பிரமணி இயக்குநராக உள்ள, 'வீரியான் டெக்' நிறுவனம் சார்பில், ஏ.ஆர்., மற்றும் வி.ஆர்., தொழில் நுட்பட்பத்தில், 'நீட்' தேர்விற்கான பயிற்சியை மேற்கொள்ள, 'எட்சார்' என்ற கற்றல் தளம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இதற்கான துவக்க நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.
இதில், கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் பண்டி கங்காதர், ஜேம்ஸ் மருத்துவமனை, கல்லுாரிகள் தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார், தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸ் லட்சுமி, நடிகர் தாமு, மதுரை பராசக்தி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த டாக்டர் ஜெகதீசன் உட்ப ட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து, டாக்டர் ராமசுப்பிரமணி கூறிய தாவது:
'நீட்' தேர்வுக்காக, பல மாணவர்கள் அதிக கட்டணம் உள்ள பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால், குறைந்த கட்டணத்தில், எல்லோரும் பயன்படும் வகையில், எட்சார் கற்றல் தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
வீடியோ, ஆடியோ, 'எம்சி கியூஸ்' ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் புத்தகங்களுடன், குறைந்த கட்டணத்தில் பயிற்சி தர முடிவு செய்துள்ளோம்.
இதனால், நீட் தேர்வுக்கு 12 புத்தகங்கள் படிப்பதற்கு பதிலாக, இந்த மூன்று புத்தகங்களை படித்தாலே போதும்.
புத்தகங்களுடன் 'எட்சார்' தளத்தில் பதிவு செய்ய, ஓராண்டிற்கான சந்தா கட்டணம் 23,999 ரூபாய் மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.