/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெம்மேலி கடல் நீர் ஆலை 10 நாளில் ஒப்படைப்பு?
/
நெம்மேலி கடல் நீர் ஆலை 10 நாளில் ஒப்படைப்பு?
ADDED : ஜன 30, 2024 12:43 AM
சென்னை,சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடல் நீர் சுத்திகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகில் நெம்மேலி என்ற இடத்தில், கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், இற்கான பணிகள், 'டெக்டான்' என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிறுவனம், ஆலை கட்டுமான பணிகளை முடிக்க உள்ளது.
இது குறித்து, 'டெக்டான்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், லட்சுமணன் கூறியதாவது:
நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், நாட்டிலேயே மிக பெரியது. தினம் 15 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கும் திறனில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் தண்ணீர், 4.3 பைசா என்ற விலையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அடுத்த 10 நாட்களில், தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.