/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நேபாள கொள்ளையர் கைது ரூ.2 கோடி நகைகள் மீட்பு
/
நேபாள கொள்ளையர் கைது ரூ.2 கோடி நகைகள் மீட்பு
ADDED : பிப் 06, 2024 12:27 AM

நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், ஆலிவ் கடற்கரையைச் சேர்ந்தவர் பிரஜேஷ்குமார், 50. கடந்த மாதம், ஜெர்மனி நாட்டுக்கு சென்றார்.
கடந்த 30ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்ததில், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடியத்து தெரிந்தது.
அவர்களை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது. பிரஜேஷ்குமார் வீட்டில் பகுதி நேர ஓட்டுனராக வேலைபார்த்த பிரகாஷ் கட்கா என்பர், கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்து உறுதியானது.
இதையடுத்து, நேபாளத்தை சேர்ந்த பிரகாஷ் கட்கா, 30, மனோஜ் மாசி, 41, ஜனக் பிரசாத் ஜெய்ஷி, 28, ஆகியோரை கைது செய்து, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ளதங்கம், வைர நகைகள் மற்றும் 17 லட்சம் ரூபாயை மீட்டனர்.
இவர்கள், பெங்களூரு, புனே உள்ளிட்ட பகுதிகளிலும் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.