ADDED : ஏப் 19, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்,
கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் அர்ஜுன், 20. நேபாளம் நாட்டைச் சேர்ந்த இவர், தன் ஊரை சேர்ந்த நண்பர்களுடன் தங்கி, எம்.ஆர்.நகரில் உள்ள 'பாஸ்ட் புட்' கடையில் பணிபுரிகிறார்.
நேற்று வேலை முடிந்து, தன் நண்பர்களான கிருஷ்ணா, ஜீவன் ஆகியோருடன், வீட்டருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கத்திமுனையில் மிரட்டி அர்ஜுனிடம் இருந்த 8,000 ரூபாயை பறித்து தப்பினர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.