/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியிடம் சில்மிஷம் நேபாள நபருக்கு 'காப்பு'
/
மாணவியிடம் சில்மிஷம் நேபாள நபருக்கு 'காப்பு'
ADDED : மே 31, 2025 03:15 AM
நொளம்பூர்:அண்ணா நகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவி, நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், திடீரென அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட, அவ்வழியாக சென்றவர்கள் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து, நையப்புடைத்து திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
காயமடைந்த வாலிபரை முதலுதவி சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், பின், திருமங்கலம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், நேபாளத்தைச் சேர்ந்த பிரதீப் குமார், 20, என்பதும், அருகில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.