ADDED : பிப் 16, 2024 12:15 AM
தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையில் துரித உணவகம் நடத்தி வருபவர் சதீஷ்குமார், 39.
கடந்த 11ம் தேதியன்று, இவரது உணவகத்திற்கு வந்த, வேளச்சேரியைச் சேர்ந்த ரவுடி பாட்டில் மணி, 29, என்பவர், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
அத்துடன், சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, மாமூல் கேட்டு உள்ளார். இதுகுறித்து புகாரின்படி, பாட்டில் மணியை தேனாம்பேட்டை போலீசார் தேடி வந்தனர்.
இதையறிந்த பாட்டில் மணி, நேற்று முன்தினம் சதீஷ்குமார் உணவகத்திற்கு மீண்டும் வந்து,'என் மீதே போலீசில் புகார் கொடுப்பாயா' என மிரட்டி, உணவகத்தை சூறையாடியுள்ளார்.
பின், கல்லாப்பெட்டியில் இருந்து 27,000 ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிஉள்ளார்.
இதுகுறித்து சதீஷ்குமார், மீண்டும் போலீசில் புகார் அளித்தார். பாட்டில் மணியை போலீசார் தேடி வருகின்றனர்.