/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளைஞரை தாக்கி பணம் பறித்த நபர்களுக்கு வலை
/
இளைஞரை தாக்கி பணம் பறித்த நபர்களுக்கு வலை
ADDED : மே 16, 2025 12:32 AM
குன்றத்துார்பல்லாவரம் அருகே அனகாபுத்துார் பகுதியை சேர்ந்தவர் புகழ்வாணன், 28; தனியார் ஊழியர். நேற்று முன்தினம் இரவு, குன்றத்துார் அருகே சதானந்தபுரத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அவரது நண்பர்கள், புகழ்வாணனை பைக்கில் அழைத்துக் கொண்டு, குன்றத்துார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.
அங்கு, மது குடிக்க புகழ்வாணனிடம் பணம் கேட்ட போது, அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால், புகழ்வாணானை தாக்கி, அவரது மொபைல் போனில் ஜிபே வாயிலாக, 1,500 ரூபாயை, வேறு ஒரு மொபைல் போன் எண்ணுக்கு மாற்றம் செய்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து, குன்றத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு நபர்களை தேடி வருகின்றனர்.