/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை ஒப்பந்ததாரரை வெட்டியோருக்கு வலை
/
சாலை ஒப்பந்ததாரரை வெட்டியோருக்கு வலை
ADDED : பிப் 19, 2024 01:32 AM
திருமுல்லைவாயில்:ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம், 44; சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்.
இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் பிரதான சாலையில் தடுப்புகள் அமைத்து, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, மதுபோதையில் பைக்கில் வந்த இருவர், அவ்வழியாக செல்ல வேண்டும் எனக் கூறி, சையது இப்ராஹிமிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர் வழிவிட மறுத்ததால், அங்கிருந்து சென்றனர்.
சிறிது நேரத்தில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் மேலும் இருவரை அழைத்து வந்த மர்ம நபர்கள், சையது இப்ராஹிமை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.

