/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடத்துனரை தாக்கிய மாணவர்களுக்கு வலை
/
நடத்துனரை தாக்கிய மாணவர்களுக்கு வலை
ADDED : பிப் 06, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50. இவர், வடபழனி மாநகரப் பேருந்து பணிமனையில் நடத்துனராக வேலை செய்கிறார். பூந்தமல்லி முதல் அண்ணா சதுக்கம் வரை 'தடம் எண் : 25 டி' நடத்துனராக நேற்று காலை பணியில் இருந்தார்.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பேருந்து சென்ற போது கல்லூரி மாணவர்கள் எட்டுபேர் படியில் தொங்கியபடி பயணித்தனர். அவர்களிடம் பேருந்துக்கு உள்ளே ஏறும்படி கூறியதால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், நடத்துனரை தாக்கிவிட்டு, தப்பி ஓடினர்.
கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.