/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்களை தாக்கி வாக்கி டாக்கி பறித்தோருக்கு வலை
/
துாய்மை பணியாளர்களை தாக்கி வாக்கி டாக்கி பறித்தோருக்கு வலை
துாய்மை பணியாளர்களை தாக்கி வாக்கி டாக்கி பறித்தோருக்கு வலை
துாய்மை பணியாளர்களை தாக்கி வாக்கி டாக்கி பறித்தோருக்கு வலை
ADDED : நவ 03, 2024 12:27 AM
சென்னை, வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 52. இவர், நேற்று அதிகாலை டாக்டர் நடேசன் சாலையில் குப்பை அகற்றும் பேட்டரி வாகனத்தை இயக்கிச் சென்றார்.
அப்போது, நான்கு டூ - வீலர்கள் எதிரே அதிவேகமாக வந்துள்ளன. இதை கவனித்த சிவலிங்கம் வாகனத்தை ஓரம் கட்ட முற்பட்டபோது, ஒரு டூ - வீலர் மீது லேசாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த இருசக்கர வாகன ஓட்டி, சிவலிங்கத்தை கடுமையாக தாக்கி உள்ளார். இதை துப்புரவு மேற்பார்வையாளர் செல்வகணபதி தடுக்க முற்பட்டபோது, அவரையும் தாக்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவர் வைத்திருந்த வாக்கி டாக்கியையும் பறித்து தப்பினர்.
இது குறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.