டிவிஷன் கிரிக்கெட் போட்டி நேதாஜி சி.சி., அணி அபாரம்
டிவிஷன் கிரிக்கெட் போட்டி நேதாஜி சி.சி., அணி அபாரம்
ADDED : ஜன 08, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆடவருக்கான டிவிஷன் கிரிக்கெட் தொடர், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது. இதன் ஐந்தாவது டிவிஷன் போட்டிகள், செயின்ட் பீட்ஸ் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கின்றன.
நேற்று முன்தினம் மதியம் நடந்த இரண்டாவது போட்டியில், நேதாஜி சி.சி., அணி, நுங்கம்பாக்கம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை எதிர்த்து மோதியது. டாஸ் வென்ற நுங்கம்பாக்கம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த நேதாஜி அணி, 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 246 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய நுங்கம்பாக்கம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 30.2 ஓவர்களில், 107 ரன்கள் மட்டுமே அடித்து, 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், நேதாஜி அணி, 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
