/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெட்பால் அரசு பள்ளி அணிகள் அசத்தல்
/
நெட்பால் அரசு பள்ளி அணிகள் அசத்தல்
ADDED : ஜன 31, 2025 11:46 PM

சென்னை, 'தோழமை அமைப்பு' கடந்த 2014ல் இருந்து, ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு இடையிலான நெட்பால் போட்டியை, நடத்தி வருகிறது. அந்த வரிசையில், இந்தாண்டு பள்ளி மாணவியருக்கான நெட்பால் போட்டியை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி வளாகத்தில் நேற்று நடத்தியது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, 20 அணிகள் பங்கேற்றன.
தேசிய கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை உள்ளிட்டோர், நேற்று காலை போட்டியை துவக்கி வைத்தனர். முதல் போட்டியில், பெருங்குடி அரசு பள்ளி அணி, 10 - 4 என்ற கோல் கணக்கில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பள்ளியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில், துரைப்பாக்கம் அரசு பள்ளி, 7 - 3 என்ற புள்ளி கணக்கில், கண்ணகி நகர் அரசு பள்ளி அணியை தோற்கடித்தது.