/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முழுநேர கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புது கட்டடம்
/
முழுநேர கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புது கட்டடம்
முழுநேர கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புது கட்டடம்
முழுநேர கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புது கட்டடம்
ADDED : ஜன 03, 2025 12:26 AM

தாம்பரம், பெருங்களத்துார், 58வது வார்டு, கிருஷ்ணா சாலையில், முழு நேர கிளை நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு, 60,000த்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 13,000 உறுப்பினர்கள் உள்ளனர்.
நாள்தோறும், 200 முதல் 300 பேர் வந்து செல்கின்றனர். தினசரி, 12 பேர் போட்டி தேர்வு தொடர்பாக படிக்கின்றனர்.
இந்த நுாலகம் சிறிய கட்டடத்தில் இயங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் அமர்ந்து படிப்பதற்கு போதிய இடவசதி இன்றி தவிக்கின்றனர்.
புத்தகங்கள் வைப்பதற்கும் இடமில்லை. போட்டி தேர்வுக்கு படிக்கும் இடத்தில், மழை பெய்யும் போது தண்ணீர் ஒழுகுகிறது.
அதனால், போதிய இடவசதியோடு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மத்திய அரசு நிதி, 22 லட்சம் ரூபாய் செலவில், பழைய கட்டடத்தின் அருகே புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணி, 90 சதவீதம் முடிந்து விட்டது. விரைவில், முதல்வர் ஸ்டாலின், புதிய 100 நுாலக கட்டடங்களை திறந்து வைக்கவுள்ளார். அதில், இதுவும் ஒன்றாகும்.
இந்த கட்டடம் திறக்கப்பட்டால், ஒரே நேரத்தில் 50 பேர் அமர்ந்து படிக்கலாம். கணினி வசதியும் அமைகிறது. மேலும், இன்னும் ஏராளமான புத்தகங்கள் வைப்பதற்கும் இடவசதி இருக்கும்.

