/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.4.26 கோடியில் மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம்
/
ரூ.4.26 கோடியில் மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம்
ADDED : ஜூலை 11, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்ணாரப்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை புத்தா தெருவில், சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. 1,170 மாணவியர் பயிலும் இக்கட்டடம், இடநெருக்கடியில் உள்ளது.
இதனால், வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் சென்னை துறைமுகத்தின் பொறுப்பு நிதி 4.26 கோடி ரூபாய் செலவில், மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. வடசென்னை எம்.பி., கலாநிதி, ராயபுரம் எம்.எல்.ஏ., மூர்த்தி உள்ளிட்டோர், அடிக்கல் நாட்டினர்.
எட்டு வகுப்பறைகள், நுாலகம், கலையரங்கம், ஆய்வகம், நவீன கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன், இரண்டு மாடி கட்டடமாக கட்டப்படவுள்ளது.