/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவின் கல்லுாரிக்கு ரூ.21 கோடியில் புதிய கட்டடம்
/
கவின் கல்லுாரிக்கு ரூ.21 கோடியில் புதிய கட்டடம்
ADDED : மே 16, 2025 12:11 AM
சென்னை :சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அரசு கவின் கலை கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் இடநெருக்கடியில் அவதிப்பட்டு வந்தனர்.
இதை கருத்தில் கொண்டு, பதிப்போவியம், துகிலியல் பிரிவுகளுக்கு புதிய வகுப்பறைகளும், நுாலகமும் புதிதாக கட்டுவதற்கு அரசு முடிவெடுத்தது. இதற்காக, 21.1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில், மேயர் பிரியா, எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன், சுற்றுலா, பண்பாடு, ஹிந்து அறநிலையத்துறை செயலர் மணிவாசன், கலை பண்பாட்டு துறை இயக்குனர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்டுமான பணிகளை துவங்கி எட்டு மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.