தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/புதிய பேருந்து பழுது பயணியர் பரிதவிப்பு

புதிய பேருந்து பழுது பயணியர் பரிதவிப்பு

புதிய பேருந்து பழுது பயணியர் பரிதவிப்பு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போரூர்: பூந்தமல்லியில் இருந்து தி.நகருக்கு இயக்கப்பட்ட புதிய பேருந்து போரூர் அருகே நேற்று பழுதாகி நின்றதால், பயணியர் பரிதவித்தனர்.

போக்குவரத்து துறையில் புதிதாக சேர்க்கப்பட்ட பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகம் வாயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பூந்தமல்லியில் இருந்து நேற்று காலை புறப்பட்ட தடம் எண் ‘154’ புதிய மாநகர பேருந்து தி.நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.

போரூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள நிறுத்தத்தில் பயணியரை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்ட பேருந்தை, ஓட்டுநரால் மீண்டும் இயக்க முடியவில்லை.

இதையடுத்து பயணியர், மாற்று பேருந்துகளில் ஏறி சென்றனர். பணிமனையில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, பேருந்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்ட பின், மீண்டும் இயக்கப்பட்டது. பேருந்தில் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சாதாரண கட்டண பஸ்களை


குறைக்க எம்.டி.சி., முடிவு
தமிழகத்தில் மகளிர் இலவச பயண திட்டம், ‘வெற்றி பயணம்’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம் சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், சாதாரண – 1,712; சொகுசு – 1,343; மின்சார சொகுசு – 400 உட்பட மொத்தம் 3,600க்கும் பேருந்துகளில், அமலாகி உள்ளது.
இதனால், மாநகர சொகுசு பேருந்துகளில் பெண்கள் அதிகளவில் செல்கின்றனர். அதேசமயம் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. எனவே, சாதாரண கட்டண பேருந்துகளை குறைக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
வெற்றி பயணம் விரிவாக்கத்துக்கு பின், ஒவ்வொரு பணிமனையிலும் தலா 1.50 லட்சம் ரூபாய் வரை வசூல் குறைந்துள்ளது. இதற்கான தொகையை தமிழக அரசு அளித்தாலும், அன்றாட பேருந்து இயக்கம், எரிபொருள், உதிரி பொருட்கள் வாங்குவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. இதற்கான, மாற்று ஏற்பாடுகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதனால், சாதாரண கட்டண பேருந்துகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தற்போது இரண்டு நாட்களாக, சாதாரண கட்டண பேருந்துகள் குறைத்து இயக்கப்படுவதாகவும், இதனால் வேறுவழியின்றி சொகுசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டியுள்ளதாகவும், ஆண் பயணியர் குற்றம் சாட்டி உ்ளளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us