/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டட அனுமதிக்கு புதிய 'சீப் பிளானர்'
/
கட்டட அனுமதிக்கு புதிய 'சீப் பிளானர்'
ADDED : ஆக 05, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பிரிவு பணிகளை, சீப் பிளானர் ரவிகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் பிரிவு சீப் பிளானராக இருந்த ஏ.பாலசுப்ரமணியன் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பிரிவு, சீப் பிளானர் ரவிகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இவர் ஏற்கனவே, முழுமை திட்டங்கள் பிரிவு பணிகளை கவனித்து வரும் நிலையில், இது முழுநேர கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.