/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.6 கோடியில் புதிய வடிகால் பிரச்னை தீர்ந்தது
/
ரூ.6 கோடியில் புதிய வடிகால் பிரச்னை தீர்ந்தது
ADDED : டிச 03, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்தில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் புதிதாகவும், ஏற்கனவே உள்ள வடிகாலை சீரமைக்கும் பணியையும், மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நாகேஷ்வரா பூங்கா சுற்றியுள்ள சாலையில், மழைநீர் தேங்காமல் இருக்க, மாநகராட்சியினர் வடிகால் கட்டி முடித்துள்ளனர்.
மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'லஸ் அவென்யூ - நீதிபதி சுந்தரம் சாலையில், 570 மீட்டர் நீளத்திற்கு, 6 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் கட்டி முடித்துள்ளோம்.
'வடிகாலை, அருகே உள்ள பகிங்ஹாம் கால்வாயில் இணைத்துள்ளதால், வரும் காலத்தில் இப்பகுதியில் மழைநீர் தேங்காது' என்றார்.