/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை திரும்பும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் புதிய வசதி
/
சென்னை திரும்பும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் புதிய வசதி
சென்னை திரும்பும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் புதிய வசதி
சென்னை திரும்பும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் புதிய வசதி
ADDED : ஜன 17, 2025 12:40 AM
சென்னை பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு வாகனங்களில் சென்றுள்ளனர். இதனால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு, 15 முதல் 30 நிமிடங்கள் வரை வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பொங்கல் விடுமுறை முடிந்து அரசு அலுவலகங்கள் 20ம் தேதி முதல் வழக்கம்போல செயல்பட உள்ளன. இதற்காக 19 மற்றும் 20ம் தேதிகளில் பலரும் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
எனவே, சென்னையை சுற்றியுள்ள பரனுார், ஸ்ரீபெரும்புதுார், நல்லுார், வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில், வழக்கமான வழியை விட, எதிர்புறம் உள்ள சாலையில் கூடுதல் வழியை ஏற்படுத்த சுங்கச்சாவடி நிர்வாகங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.