/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை வடிவமைப்புக்கு புதிய வழிகாட்டுதல்கள் சட்டசபையில் அறிவிப்பு
/
சாலை வடிவமைப்புக்கு புதிய வழிகாட்டுதல்கள் சட்டசபையில் அறிவிப்பு
சாலை வடிவமைப்புக்கு புதிய வழிகாட்டுதல்கள் சட்டசபையில் அறிவிப்பு
சாலை வடிவமைப்புக்கு புதிய வழிகாட்டுதல்கள் சட்டசபையில் அறிவிப்பு
ADDED : ஏப் 08, 2025 01:26 AM
சென்னை, சென்னை பெருநகர் பகுதியில், அனைத்து துறைகளும் ஏற்கும் வகையில், சாலை வடிவமைப்பு வழிகாட்டுதல்கள், போக்குவரத்து குழுமமான 'கும்டா' வாயிலாக உருவாக்கப்படும் என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்தார்.
சட்டசபையில், இத்துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு, பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* சென்னை பெருநகரில், போக்குவரத்து இயக்கத்தை எளிதாக்கும் வகையில், அண்ணா நகரில் 'ஸ்மார்ட்' வாகன நிறுத்துமிட மேலாண்மை திட்டம், 'கும்டா' வாயிலாக அறிமுகப்படுத்தப்படும்
* சென்னை பெருநகரில் அனைத்து துறைகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில், சாலை வடிவமைப்புக்கான வழிகாட்டுதல்கள், 'கும்டா' வாயிலாக தயாரிக்கப்படும்
* சென்னை பெருநகரில் போக்குவரத்து பாதிப்பு குறித்து மதிப்பீடுவதற்கான வழிகாட்டுதல்கள், கும்டா வாயிலாக தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.