/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய உறுப்பினர் செயலர் 'கும்டா'வுக்கு நியமனம்
/
புதிய உறுப்பினர் செயலர் 'கும்டா'வுக்கு நியமனம்
ADDED : ஆக 25, 2025 01:26 AM
சென்னை; வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை செயலர் கே.எம்.சரையு, சென்னை போக்குவரத்து குழுமமான, 'கும்டா'வின் உறுப்பினர் செயலர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'கும்டா' என்ற ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம், 2010ல் துவக்கப்பட்டது. ரயில்வே துறையை சேர்ந்த ஜெயகுமார், சிறப்பு அலுவலராக, 2022ல் நியமிக்கப்பட்டார். இவர், உறுப்பினர் செயலராகவும் செயல்பட்டு வந்தார்.
இவரது பதவிக்காலம், கடந்த ஜூலை 31ல் முடிந்தது. ரயில்வே துறையிலும் அவர் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கும்டாவில் உறுப்பினர் செயலர், சிறப்பு அலுவலர் பதவிக்கு, முழு நேரமாக யாரை நியமிப்பது என்பதில், அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை.
இந்நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை இணை செயலர் கே.எம்.சரையு, கும்டாவின் உறுப்பினர் செயலர் பொறுப்பை, முழு கூடுதல் பொறுப்பாக கவனிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.