sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.29 கோடியில் புதிய பயணியர் முனையம் சென்னை துறைமுகத்தில் ஏப்ரலில் திறப்பு

/

 ரூ.29 கோடியில் புதிய பயணியர் முனையம் சென்னை துறைமுகத்தில் ஏப்ரலில் திறப்பு

 ரூ.29 கோடியில் புதிய பயணியர் முனையம் சென்னை துறைமுகத்தில் ஏப்ரலில் திறப்பு

 ரூ.29 கோடியில் புதிய பயணியர் முனையம் சென்னை துறைமுகத்தில் ஏப்ரலில் திறப்பு


ADDED : மார் 03, 2026 05:41 AM

Google News

ADDED : மார் 03, 2026 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை துறைமுகத்தில், 29.80 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்ட பயணியர் முனையம், அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

நாட்டில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னைத் துறைமுகம் திகழ்கிறது. இந்த துறைமுகத்தில் தற்போது, 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல், 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், சுற்றுலா பயணியர் கப்பல்கள் அதிகம் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, துறைமுக வளாகத்தில் பயணியர் முனையத்தை மேம்படுத்தும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.

இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள பயணியர் முனையத்தை, 29.80 கோடி ரூபாயில் மேம்படுத்த, தனியார் நிறுவனத் துடன், 2024 மார்ச்சில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, விமான நிலையங்களில் இருப்பது போல் எஸ்கலேட்டர், பாஸ்போர்ட் ஸ்கேனர், உடைமைகளை சோதனையிட அதி நவீன ஸ்கேனர், சுங்க, குடியுரிமை சோதனை மையம், பயணியருக்கான சொகுசு ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. தரை தளம் அந்தமான் - நிக்கோபார் பயணியருக்கும், இரண்டாம் தளம் சர்வதேச பயணியருக்கும் ஒதுக்கப்படும். மத்திய தளத்தில் உணவு, பானங்கள் வழங்கும் பகுதி உருவாக்கப் பட்டுள்ளது.

இந்த மேம்பாட்டு பணி காரணமாக, தினசரி பயணியர் கையாளும் திறன், 1,800 ஆக உயரும். வரும் ஏப்ரலில் இந்த முனையத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாக, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து மற்றும் இலங்கை நாடுகளை சேர்ந்த சொகுசு சுற்றுலா கப்பல்கள் இயக்க பேச்சு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us