/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு வாங்க புது கட்டண திட்டம் 'காசா கிராண்ட்' அறிமுகம்
/
வீடு வாங்க புது கட்டண திட்டம் 'காசா கிராண்ட்' அறிமுகம்
வீடு வாங்க புது கட்டண திட்டம் 'காசா கிராண்ட்' அறிமுகம்
வீடு வாங்க புது கட்டண திட்டம் 'காசா கிராண்ட்' அறிமுகம்
ADDED : டிச 31, 2024 12:49 AM

சென்னை, நிதி சார்ந்த எந்த சுமையும் இன்றி, மக்கள் வீடு வாங்குவதற்காக புதிய கட்டண திட்டத்தை, காசா கிராண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அறிக்கை:
கடந்த, 2003ல் துவங்கப்பட்ட 'காசா கிராண்ட்' ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனம், சென்னையை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்நிறுவனம், சென்னை மட்டுமின்றி, பெங்களூரு, ைஹதராபாத், கோவை போன்ற நகரங்களில், குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், வீடு வாங்குவோர் அதற்கான நிதி ஆதாரத்தை திரட்டுவதில் ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில், புதிய கட்டண திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இதன்படி, எங்கள் திட்டங்களில் வீட்டை முன்பதிவு செய்து, அதன் விலையில், 10 சதவீத தொகையை மட்டும் இப்போது செலுத்தினால் போதும்.
மீதி, 90 சதவீத தொகையை, பணிகள் முடித்து வீட்டை ஒப்படைக்கும்போது செலுத்தினால் போதும். இதனால், மக்கள் தங்கள் நிதி சார்ந்த இலக்குகளை எவ்வித அழுத்தமும் இன்றி திட்டமிட முடியும்.
இந்த காலகட்டத்தில், அவர்களின் எதிர்கால விருப்பங்கள் அடிப்படையில், இரண்டில் இருந்து, மூன்று படுக்கை அறை வீடுகளையும் தேர்வு செய்யவும் முடியும்.
கடந்த டிச., 26ல் துவங்கிய இத்திட்டம், ஜன., 2 வரை அமலில் இருக்கும். இதில் பங்கேற்பவர்கள், தங்கள் வீட்டுக்கான கடைசி தொகையை செலுத்த, 36 மாதங்கள் வரை கால அவகாசம் கிடைக்கும்.
இதனால் வீடு வாங்குவோர் தங்களின், சிபில் ஸ்கோரை மேம்படுத்தி, கடன் பெறும் தகுதியையும் அதிகரித்து கொள்ள வாய்ப்பு உருவாகும். இந்த சிறப்பு திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற, 98844 60877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.casagrand.co என்ற இணையதளத்தையும் அணுகலாம்.
இவ்வாறு காசா கிராண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.