/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரிமா சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு
/
அரிமா சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு
ADDED : ஜூலை 27, 2025 12:12 AM

சென்னை,திருவான்மியூர், அரிமா சங்கத்தின் 55வது புதிய தலைவர் தேர்வு மற்றும் சங்க உறுப்பினர்கள் சேர்க்கை, சமீபத்தில் நடந்தது. இதில், முன்னாள் தலைவரும், இந்தாண்டு வட்டார தலைவருமான முத்துசெல்வன் வரவேற்றார்.
'குளோபல் மெம்பர் ஷிப்' குழுவின் தலைவர் ஷோபனா கல்யாணராமன், புதிய உறுப்பினர்களை இயக்கத்தில் நியமித்து, அரிமா சங்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
சங்கத்தின் தலைவர், முன்னாள் தலைவர், துணை தலைவர், செயலர் மற்றும் முக்கிய பதவியில் உள்ளவர்கள், எப்படி செயல்பட வேண்டும் என்பதை, முதல் நிலை மாவட்ட கவர்னர் அரிமா ராஜேஷ் ஜோஷி விளக்கினார்.
இதையடுத்து, இந்த நிதி ஆண்டிற்கான தலைவராக ரவிசந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் பேசுகையில், ''நம் சங்கத்தின் இலக்காக ஏழை எளியோருக்கு கண், மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும்.
''ரத்த தான முகாம் நடத்தி புற்று நோயாளிகளுக்கு உதவ வேண்டும்,'' என்றார். விழாவில், மண்டல தலைவர் அருண்குமார், செயலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.