/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நியூ பிரின்ஸ் பள்ளி அறிவியல் கண்காட்சி
/
நியூ பிரின்ஸ் பள்ளி அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 30, 2024 12:04 AM

சென்னை, சென்னை அடுத்த உள்ளகரம், ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை மற்றும் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியர் செகண்டரி ஸ்கூல் பள்ளியில் இரண்டு நாள் அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
நியூ பிரின்ஸ் கல்வி குழும நிறுவனத் தலைவர் கே.லோகநாதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியை, அமைச்சர் அன்பரசன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரின் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை, பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர் அன்பரசன் பேசுகையில், ''சென்னை, புறநகர் பகுதியில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக நியூ பிரின்ஸ் பள்ளி திகழ்கிறது. மாணவ - மாணவியர் சிறந்த மருத்துவர், பொறியாளர் மற்றும் விஞ்ஞானிகளாக உருவாவதற்கு, இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் வழிவகுக்கின்றன,'' என்றனர்.
முன்னதாக, நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன் அனைவரையும் வரவேற்றார்.
நியூ பிரின்ஸ் கல்வி குழும செயலர் வி.எஸ்.மகாலட்சுமி, துணைத்தலைவர்கள் எல்.நவீன் பிரசாத், எல்.அர்ச்சனா. நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கே.அமுதா, நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியர் செகண்டரி ஸ்கூல் பள்ளி முதல்வர் ஜெ.ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.