/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் ஒரே வாரத்தில் பெயர்ந்த புதிய தார் சாலை
/
ஓ.எம்.ஆரில் ஒரே வாரத்தில் பெயர்ந்த புதிய தார் சாலை
ஓ.எம்.ஆரில் ஒரே வாரத்தில் பெயர்ந்த புதிய தார் சாலை
ஓ.எம்.ஆரில் ஒரே வாரத்தில் பெயர்ந்த புதிய தார் சாலை
ADDED : டிச 02, 2025 04:09 AM

துரைப்பாக்கம்: ஓ.எம்.ஆரில் புதுப்பிக்கப்பட்ட தார் சாலை, ஒரே வாரத்தில் பெயர்ந்து, மீண்டும் பள்ளமாகி உள்ளது.
ஓ.எம்.ஆரில் மெட்ரோ பணி முடிந்த 3.5 கி.மீ., தொலைவுக்கு சாலை புதுப்பிக்கப்பட்டது. பள்ளத்தை ஒட்டு போட்டு சீரமைத்துவிட்டு, பருவமழை முடிந்த பின் முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், காரப்பாக்கம் பகுதிகளில், கடந்த வாரம் சாலை முழுதும் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், தரமில்லாமல் அமைக்கப்பட்டதால், ஒரே மழைக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பள்ளம் விழுந்து வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தார் சாலை, 15 நாட்களாவது வெயிலில் காய்ந்தால் தான் தரமாக இருக்கும். மழைக்கு தாங்கும். மழை நேரத்தில் 'பேட்ச் ஒர்க்' மட்டுமே செய்ய கூறினோம். ஒப்பந்த நிறுவனங்கள் முழு சாலையையும் போட்டதால், மழையில் தாங்கவில்லை. பள்ளமான பகுதிகளை சீரமைக்க கூறி உள்ளோம்' என்றனர்.

