ADDED : பிப் 03, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
புழல்: புழல், புத்தகரம் சந்தோஷ் நகரில், நேற்று புதிதாக டாஸ்மாக் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதி பா.ஜ., நிர்வாகிகளில் சிலர், கடைக்கு நேற்று முன்தினம் இரவு பூட்டு போட்டு சென்றனர்.
நேற்று மதியம் கடையை திறக்க வந்த 'டாஸ்மாக்' நிர்வாகத்தினர், கடைக்கு மேல் பூட்டு போட்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புழல் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
