ADDED : ஜூலை 12, 2026 03:30 AM
ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர் நாகராஜன் பேசியதாவது:
உலக தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது, இந்தியாவின் தென்மாநில நகரங்களில், தங்கள் கிளைகளை அமைத்து வருகின்றன. அந்த வகையில், தகவல் தொழில்நுட்பம், டெக்ஸ்டைல்ஸ், வேளாண் தொழில்நுட்பம், பயோமெடிக்கல், மருந்து மற்றும் சுகாதாரம், செமிகண்டக்டர் உள்ளிட்ட துறை நிறுவனங்களில், சென்னையிலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
'எலக்ட்ரானிக் சிப்' தயாரிக்கும் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு புதிய துறைகளுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் வர உள்ளன. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப மேம்பாடுக்கு தனி வரவேற்பு உள்ளது. அதனால், மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்கும் நான்காண்டு காலத்தில், புதிய தொழில்நுட்பங்களை அறியும் வேட்கையோடு, தேடுதலில் ஈடுபட வேண்டும்.
படிப்பை முடித்ததும் சர்வதேச நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமையுடனும், குழுவிற்கு தலைமை தாங்குவது உள்ளிட்ட பண்புகளுடனும் வெளிவர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
