sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 செய்தி எதிரொலி:வி.ஏ.ஓ., ஆபீஸ் மீண்டும் தண்டுரைக்கு இடமாற்றம்

/

 செய்தி எதிரொலி:வி.ஏ.ஓ., ஆபீஸ் மீண்டும் தண்டுரைக்கு இடமாற்றம்

 செய்தி எதிரொலி:வி.ஏ.ஓ., ஆபீஸ் மீண்டும் தண்டுரைக்கு இடமாற்றம்

 செய்தி எதிரொலி:வி.ஏ.ஓ., ஆபீஸ் மீண்டும் தண்டுரைக்கு இடமாற்றம்


ADDED : மார் 19, 2026 03:40 PM

Google News

ADDED : மார் 19, 2026 03:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கிராம நிர்வாக அலுவலகம் மீண்டும் தண்டுரை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

தண்டுரை கிராம நிர்வாக அலுவலகம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாபிராம், சி.டி.எச்., சாலையில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம், அடிப்படை வசதிகளின்றி பாழடைந்து இருந்தது. இதையடுத்து, அதை இடித்து புது கட்டடம் கட்டும் பணி தற்போது துவங்கி உள்ளது.

இதையடுத்து, தற்காலிகமாக அலுவலகம் ஆவடி, ஜெ.பி., எஸ்டேட்டில் உள்ள ஆர்.ஐ., அலுவலக வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக மக்கள் 7 கி.மீ., துாரம் சென்று வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர்கள் படும் அவதி குறித்து, நம் நாளிதழில் கடந்த 2ம் தேதி செய்தி வெளியானது.

மீண்டும் சர்ச்சை



இதன் எதிரொலியாக, அங்கு செயல்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலகம், மீண்டும், தண்டுரை, பள்ளத் தெருவில் உள்ள தனியார் கட்டடத்தில் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், இடமாற்றம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் தனியார் ரியல் எஸ்டேட் அலுவலகத்தின் உள்ளே இடமாற்றம் செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us