ADDED : ஆக 02, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
8 கிலோ கஞ்சா பறிமுதல் பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, மதுரையைச் சேர்ந்த பிரவீன், 24, அலெக்ஸ் பாண்டியன், 25, ஆகியோரை, பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கட்டுமான தொழிலாளர்கள் போல சென்னையில் தங்கி, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
பேட்டரி திருடியவர் கைது வளசரவாக்கம், ஆற்காடு சாலை லட்சுமி நகரில், மெட்ரோ வழித்தட பணித்தளத்தில் 'ஜெனரேட்டர்' பேட்டரி திருடிய, மேற்கு முகப்பேரைச் சேர்ந்த ராஜு, 25, என்பவரை, அலெக்சாண்டர், 39, உள்ளிட்ட பணியாளர்கள் பிடித்து, வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

