/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செய்திகள் சில வரிகளில்(11.10.2025)
/
செய்திகள் சில வரிகளில்(11.10.2025)
ADDED : அக் 11, 2025 01:33 AM
இலவச பயணம்
3.97 கோடி பேர் பயன்
சென்னை: மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் செப்டம்பரில், 10.40 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். தினமும், 34.70 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இலவச பயண திட்டத்தில், 3.97 கோடி மகளிர், மாணவர் பயண அட்டை வாயிலாக, 1.19 கோடி பேரும் பயன்பெற்றுள்ளனர்.
6 ஆண்டுக்கு பின்
சிற்றுந்து சேவை
ஆவடி: ஆவடியில் இருந்து திருநின்றவூர் வடக்கு பிரகாஷ் நகரை இணைக்கும் வகையில், 2019ல் ஆவடி, கவரப்பாளையம், நெமிலிச்சேரி வழியாக, 'எஸ் 49' என்ற அரசின் சிற்றுந்து சேவை துவங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் இச்சேவை நிறுத்தப்பட்டது. பயணியர் கோரிக்கையடுத்து, 'எஸ் 49' சிற்றுந்து சேவை, ஆறு ஆண்டுகளுக்கு பின் நேற்று மீண்டும் துவங்கப்பட்டது.
பல்கலையில் மாணவர்
சேர்க்கை துவக்கம்
சென்னை: சென்னை பல்கலையில், முனைவர் பட்ட மேலாய்வாளர் படிப்புகளான, டி.எஸ்சி., டி.லிட் பட்டம், எல்.எல்.டி., மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள், https://www.unom.ac.in இணையதளத்தில் அக்., 15க்குள் விண்ணப்பிக்கலாம்.