ADDED : அக் 25, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒன்பது நாளில் 41 மரங்கள் ' அவுட் '
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை ஒன்பது நாட்களில், 41 மரங்கள் சாய்ந்துள்ளன.
பருவமழையால் விழும் மரங்களை அகற்ற, மண்டலத்திற்கு 12 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மரக்கழிவை அகற்ற, 15 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், சனிக்கிழமையான நேற்று, பொதுமக்கள் 92 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, 37.91 டன், பயன்பாடில்லாத மரச்சாமான்கள், படுக்கைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
இப்பொருட்கள், கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்து சென்று, விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டன.
இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

