தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆம்புலன்ஸ் வந்தால் தானாக மாறும் சிக்னல்; மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள்

ஆம்புலன்ஸ் வந்தால் தானாக மாறும் சிக்னல்; மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள்

ஆம்புலன்ஸ் வந்தால் தானாக மாறும் சிக்னல்; மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்புகள்


ADDED : அக் 14, 2014 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2014 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அம்பத்துார் : மின்சாரம் வீணாகாமல் சேமிக்கும் கருவி, ஆம்புலன்ஸ் வந்தால் தானாக மாறும் சிக்னல், ரயில் பயணத்தின் போது வீசும் காற்றில் இருந்து அலைபேசிக்கு 'சார்ஜ்' ஏற்றுதல் என, அசத்தல் கண்டுபிடிப்புகளுக்காக, கல்லுாரி மாணவ, மாணவியர் பரிசு பெற்றுள்ளனர்.

மீனம்பேடு, அன்னை வயலட் கல்லுாரியில் நடந்த, இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில், மூன்று குழுக்கள், இளம் விஞ்ஞானி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

ரூ. 10,000 பரிசு : அன்னை வயலட் கலை, அறிவியல் கல்லுாரியில், கடந்த, 11ம் தேதி, அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில், 31 பள்ளி, கல்லுாரிகள் பங்கேற்றன. சிறந்த படைப்பாளிகளுக்கு, இளம் விஞ்ஞானிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.விஜயந்தா மாதிரி மேல்நிலை பள்ளியின் இம்மானுவேல், லோகநாதன் ஆகியோர் தயாரித்த, 'முடிவில்லா சக்தி' என்ற படைப்பு, முதல் பரிசை பெற்றது. அவர்களுக்கு 10,000 ரூபாயும், விருதும் அளிக்கப்பட்டன.அந்த கருவியின் மூலம், மின்சாரம் வீணாகாமல், மீண்டும் மீண்டும், பாட்டரியில் சேமித்து பயன்படுத்த முடியும். மின்சாரத்தை சேமிக்க, வீணாகிய குறுந்தகடுகளை பயன்படுத்தி இருந்தனர்.

இரண்டாம் பரிசுக்கு, ஸ்ரீஎஸ்.என்.பி.டி கல்லுாரியின், விக்னேஷ், சாம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு, 7,500 ரூபாயும், விருதும் வழங்கப்பட்டன.அவர்கள், உருவாக்கிய, 'க்ளியர் ட்ராபிக் சிக்னல்' என்ற கருவியை, ஆம்புலன்ஸ் வாகனத்தில் பொருத்தி, ஆபத்து நேரங்களில் இயக்கி, பயணித்தால், எதிரில் உள்ள சிக்னல் விளக்கை தானாகவே இயக்கி, மற்ற வாகனங்களை கட்டுப்படுத்தி, ஆம்புலன்ஸுக்கு வழிவிடும் என, விளக்கினர். மூன்றாம் பரிசுக்கு, லுார்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் ஷாலினி, ரம்யா ஆகியோர் உருவாக்கிய, 'மின்கழிவு மேலாண்மை' தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களுக்கு, 5,000 ரூபாயும், பரிசும் வழங்கப்பட்டன.

வித்தியாச மின்விசிறி : அவர்கள், ரயில் பயணத்தின் போது, ஜன்னலில் வீசும் காற்றை பயன்படுத்தி, அலைபேசிக்கு, 'சார்ஜ்' செய்யும் சிறிய மின் விசிறியை படைத்திருந்தனர்.திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி மைய, தாவர நோயியல் விஞ்ஞானி, தங்கவேலு, தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு விருதுகளை வழங்கினார். விழாவில், கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் பங்கேற்று, இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us