தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/அன்று பொட்டல் காடு; இன்று மூலிகை வனம் :இளைஞர்களின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி

அன்று பொட்டல் காடு; இன்று மூலிகை வனம் :இளைஞர்களின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி

அன்று பொட்டல் காடு; இன்று மூலிகை வனம் :இளைஞர்களின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி


UPDATED : நவ 25, 2014 05:21 AM

ADDED : நவ 24, 2014 11:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2014 05:21 AM ADDED : நவ 24, 2014 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: சுற்றுச்சூழலை பசுமையாக்க, கிராமத்து இளைஞர்கள் தொலைநோக்கு பார்வையுடன், காடு வளர்த்து வருகின்றனர். பொட்டல் காடாக கிடந்த இடம், இன்று மூலிகை வனமாக மாறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தை பசுமையாக்கும் முயற்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தன்னலமில்லாத சேவை மூலமாக, பொட்டல் காடாக இருந்த இடம் இன்று மூலிகை மரங்களால் நிறைந்துள்ளது. அம்மையார்குப்பம் கிராமத்தின் வடக்கு பகுதியில் அய்யப்பன் மலைக்கோவில் உள்ளது. அதன், அடிவாரத்தில் வாரியார் தியான மண்டபம் அமைந்துஉள்ளது.இதை ஒட்டிய சமூக காடு மற்றும் மலை பகுதி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், பொட்டல் காடாக வறண்டு கிடந்தது. பொழுதுபோக்க அங்கு சென்ற கிராமத்து பட்டதாரி இளைஞர்கள், அங்கு மரங்களை நட்டு வளர்க்க விரும்பினர். அதன் படி, விளையாட்டாக ஆரம்பித்த காடு வளர்ப்பு திட்டத்தில், இதுவரை ஐந்தாயிரம் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இதில், பறவைகளுக்கு உணவு அளிக்கக்கூடிய, ஆலமரம், அரசு, அத்தி, நாவல், இலுப்பை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

இவை பல்வேறு காலகட்டங்களில் காய்க்கக்கூடியவை. இதனால், இப்பகுதியில் உள்ள பறவைகளுக்கு, ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும். மேலும், இந்த மலைப்பகுதியில் கிரிவலம் துவங்கவும், கிராமவாசிகள் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி, மகிழம், நெல்லி, சரக்கொன்றை, வில்வம், நாகலிங்கம், வேம்பு உள்ளிட்ட மூலிகை மரங்களும் இடம்பெற்று உள்ளன.இது தவிர, பயோ டீசல் தயாரிக்க உதவும், பின்னை, புங்கன் மரங்களும், ஆக்சிஜனை அதிகளவில் வெளியிடக்கூடிய, மரங்களும் நடப்பட்டு உள்ளன. கிராம இளைஞர்களின் இந்த ஆர்வ பணியால், பொட்டல் காடு, இன்று மூலிகை வனமாக காட்சியளிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

வனத்துறை ரோந்து பணி அவசியம்:



பல்வேறு நலன்களை கருத்தில் கொண்டு, எல்லா வகையான மரங்களும், இந்த காட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கால்நடைகள் மற்றும் சமூகவிரோதிகளிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக, வனத்துறையினர் இப்பகுதியில் அவ்வப்போது ரோந்து மேற்கொண்டால், மேலும், இந்த காடு செழிப்பாக இருக்கும் என, இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us