தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/அனைவருக்குமான இசையாக கர்நாடக சங்கீதத்தை மாற்ற வேண்டும்

அனைவருக்குமான இசையாக கர்நாடக சங்கீதத்தை மாற்ற வேண்டும்

அனைவருக்குமான இசையாக கர்நாடக சங்கீதத்தை மாற்ற வேண்டும்


ADDED : டிச 15, 2014 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2014 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

என் சொந்த ஊர் நாகூர், எப்போதும் இசையால் நிரம்பி வழியும். அங்குள்ள முஸ்லிம்கள், சூபி இசையை கொண்டாடுவர். அருகில் உள்ள காரைக்காலில் கீர்த்தனைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். அதேபோல், தேவாலயங்களில் மேற்கத்திய 'கிளாசிக்' இசையை எப்போதும் கேட்கலாம்.சிறு வயதில் இருந்தே இசையோடு வளர்ந்தவன் நான். ஆனால், இன்றுள்ள தலைமுறைக்கு, அது சாத்தியமா என்பது கேள்விக்குரியது. சினிமா இசையை மட்டுமே, ஒட்டுமொத்த இசை உலகம் என, நாம் வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு. தியாகராஜ பாகவதரின், 'ஹரிதாஸ்' திரைப்படம், மூன்று ஆண்டுகள் ஓடின. அதன் பாடல்களை கேட்டு, சென்னையில் உள்ள ரிக் ஷாக்காரர்களுக்கு கூட, சங்கீத அறிமுகம் கிடைத்தது. ஆனால், இப்போது அப்படி அல்ல.நான், டில்லியில் பணிபுரிந்த, 10 ஆண்டுகளிலும் இசையோடு வாழ்ந்தேன். அங்குள்ள பிரகதி மைதானத்தில், அனைத்து கர்நாடக இசை கலைஞர்களின் கச்சேரிகளை கேட்டிருக்கிறேன். 80களில், அதற்கான நுழைவுக்கட்டணம், இரண்டு ரூபாய். மார்கழி மாதம் முழுக்க, அங்கு இருப்பேன். இசை, என் நிழலைப் போல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.ஆனால், சென்னையில் நடக்கும் மார்கழி இசை உற்சவங்கள் அனைத்தும், மேட்டுக்குடி வர்க்கத்துக்கானதாக மாறி வருகின்றன. 500, 400 ரூபாய் என, நுழைவுக் கட்டணமே மிரள வைக்கிறது. அதை தகர்த்து, எளிய மக்களும், இசையை அறிந்து கொள்ளும் விதத்தில், இலவசமாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பூங்காக்களிலும், இலவச கச்சேரி நடத்தப்பட வேண்டும்.'இசை நுட்ப விளக்கம்' என்ற புத்தகத்தில், தமிழிசையின் மற்றொரு வடிவம் தான் கர்நாடக சங்கீதம் என, எம்.டி.ராமநாதன் குறிப்பிட்டுள்ளார். அதில் எனக்கு முழுக்க உடன்பாடு உண்டு.நம் மரபு சார்ந்த இசையை வளர்த்தெடுக்க வேண்டியது, நம் அனைவரின் கடமை. கர்நாடக சங்கீதம், ஒரு சாராருக்கு மட்டுமானதல்ல; நம் அனைவருக்கு மானது. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.கர்நாடக சங்கீத கலைஞர்களை அவமதிக்கும் போக்கு, சமீபகாலங்களில் உருவாகி உள்ளது. லிங்குசாமியின் இயக்கத்தில் உருவான, 'அஞ்சான்' திரைப்படத்தில், அதுபோன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அதை பார்த்து கோபமடைந்த நான், ''மும்மூர்த்திகள் இசையை முழுக்க கேளுங்கள். அப்போது தான் உங்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும்,'' என, அவருக்கு கடிதம் எழுதினேன்.பால் விலை, மின்சார கட்டணம் உயர்ந்துள்ள இன்றைய நிலையில், நான் ஏன் இசையை கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பாதீர்கள். விலைவாசி உயர்ந்து விட்டது என்பதற்காக, உயர்தர 'மால்'களுக்கு செல்லாமல் இருக்கிறீர்களா, 200 ரூபாய் கொடுத்து 'லிங்கா' பார்க்காமல் இருக்கிறீர்களா?

- சாருநிவேதிதா -எழுத்தாளர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us