15 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு 'மியாட்' மருத்துவர்கள் சாதனை
15 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு 'மியாட்' மருத்துவர்கள் சாதனை
ADDED : ஜூலை 09, 2017 02:28 AM
சென்னை:'உயிர் பிழைக்க, 5 சதவீத
வாய்ப்பே உள்ளது' என, பிற மாநில மருத்துவர்கள் கூறிய நிலையில்,
சிக்கலான, 'அயோடிக் டைசெக் ஷன்' பாதிப்பிற்கு, 'எண்டோ வாஸ்குலார்
ஸ்டென்டிங்' முறையில், மியாட் மருத்துவமனை மருத்துவர்கள்,
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம்,
விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர், ஸ்ரீ சைத்தன்யா
இன்ஸ்டிடியூட்டின் வேதியியல் துறை விரிவுரையாளரான, பி.பிரசாத்
ராவின் மகன் பரத், 15; பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.5 சதவீத வாய்ப்புபரத் பிரச்னை குறித்து பிரசாத் ராவ் கூறிய தாவது:
ஏப்ரல்,
27ல், வழக்கம் போல் நீச்சல் பயிற்சியை முடித்து விட்டு வந்தவனுக்கு
மயக்கம், கால்களில் வலி இருந்தது. உடனே, மருத்துவரிடம்
காட்டினோம்.நரம்பியல் கோளாறாக இருக்கலாம் என, சிகிச்சை
அளித்தார். ஆனால் அடுத்த நாள், மார்பு பகுதி, வயிற்றில் அதிக வலி
இருப்பதாக பரத் கூறினான். பரிசோதனைகளில், அவனின் உடலின் கீழ்
பகுதியில் ரத்தம் ஓட்டமில்லாதது கண்டறியப்பட்டது.
'சி.டி., ஆஞ்சியோ' பரிசோதனை செய்ததில், 'அயோடிக் டைசெக் ஷன்' இருப்பது உறுதியானது.
உடலின்
கீழ் பாகத்திற்கு ரத்தத்தை செலுத்தும், 'அயோட்டா' என்ற மகாதமனியில்
ஏற்படும் கோளாறால், உடலின் கீழ் பகுதிக்கு ரத்த ஓட்டம்
இருப்பதில்லை.
இதற்கு, மரபியல் ரீதியான காரணம் இல்லை என்றாலும்
குழந்தைகளுக்கு இப்பிரச்னை வருவதற்கான காரணம் தெரியவில்லை. பரத்
உயிர் பிழைக்க, 5 சதவீத வாய்ப்புகளே உள்ளதாக, மருத்துவர்கள் கூறிய
நிலையில், மே இறுதியில் மியாட் மருத்துவமனையில்
சேர்த்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.
பரத்திற்கு
சிகிச்சை அளித்த இதய, நுரையீரல் அறுவை சிகிச்சை பிரிவு இயக்குனர்
டாக்டர் விஜித், கே.செரியன் மற்றும், 'இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி'
பிரிவு தலைவர் டாக்டர் கே.முரளி கூறியதாவது:
சவாலான பணி
பரத்தின்
வயது காரணமாக, ரத்த நாளங்கள் மிகவும் மெல்லியதாக அதாவது, 5
மி.மீ., இருந்தது. சாதாரணமாக, 8 மி.மீ., இருந்தால் தான் ரத்தநாளம்
வழியாக, 'ஸ்டென்டை' செலுத்த முடியும்.
இதனால், வலது பக்க மார்பில் அயோட்டாவின் மேல் பகுதியில், 1 செ.மீ., துளையிட்டு, ஸ்டென்டை நுழைப்பதற்கு வசதியாக வழி ஏற்படுத்தினோம்.
ஆனாலும்,
ஸ்டென்டை பொருத்துவது சவாலாக இருந்தது. அயோட்டாவின் கீழ் பகுதி மிக
மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால், வேறு வழி இல்லாமல் கால்களில்
உள்ள ரத்த நாளங்களின் வழியே, 1 மி.மீ., துளையிட்டு, ஸ்டென்ட்
பொருத்தினோம்.
தற்போது, பரத் நலமாக உள்ளார். 1 கி.மீ., துாரம் எந்த
பிரச்னையும் இல்லாமல் நடக்க முடிகிறது. மிக கடினமான உடற்பயிற்சி
தவிர்த்து, சாதாரணமாக எல்லா வேலைகளையும் இனி அவரால் செய்ய
முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
