தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மியாட் - கிறிஸ்டி பவுண்டேஷன் ஒப்பந்தம்

மியாட் - கிறிஸ்டி பவுண்டேஷன் ஒப்பந்தம்

மியாட் - கிறிஸ்டி பவுண்டேஷன் ஒப்பந்தம்


ADDED : டிச 15, 2017 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2017 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையும், இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள கிறிஸ்டி பவுண்டேஷனும் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளன.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில், கேன்சர் சிறப்பு மருத்துவ மையமான, கிறிஸ்டி பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. இதனுடன் இணைந்து செயல்படவும், கேன்சர் சிகிச்சையில், நவீன மருத்துவ தொழில்நுட்பம், சிகிச்சை முறைகள் உட்பட, தேவையான அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மியாட் மருத்துவமனை கையெழுத்திட்டு உள்ளது. மியாட் மருத்துவமனையில் நடந்த இந்நிகழ்ச்சியில், கிறிஸ்டி பவுண்டேஷன் மற்றும் மியாட் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:கேன்சர் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிகென பிரத்யேகமாக செயல்படும் கிறிஸ்டி பவுண்டேஷன், 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது, ஒருங்கிணைந்த கேன்சர் சிகிச்சையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. கேன்சர் நோய் முற்றிய நிலையில், 3வது, 4வது கட்டத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கிறிஸ்டி ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதல் பயன் உள்ளதாக

இருக்கும்.

கதிரியக்க சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ள நோயாளி களுக்கு அளிக்கப்படும், 'புரோட்டான் பீம்' சிகிச்சை, கிறிஸ்டி மையத்தில் உள்ளது. இந்த சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை, அங்கு அனுப்பி சிகிச்சை பெறச் செய்ய முடியும்.இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us