/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய தொடர் ஓட்டம் : தமிழக அணிக்கு வெள்ளி
/
தேசிய தொடர் ஓட்டம் : தமிழக அணிக்கு வெள்ளி
ADDED : டிச 26, 2018 01:33 AM
சென்னை: தேசிய அளவிலான தொடர் ஓட்ட குழு போட்டியில், தமிழக அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.இந்திய பள்ளிக் குழுமம் சார்பில், தேசிய அளவிலான தடகளப் போட்டிகள், டில்லியில் உள்ள தியாகராஜ் அரங்கில், சமீபத்தில்நடந்தன.
இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு வகை போட்டிகள் நடந்தன.இந்நிலையில், தொடர் ஓட்டம், 4*100 குழு போட்டியில், தமிழக அணியானது, இரண்டாம் இடம் பெற்று, வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த போட்டியில், தமிழகம் சார்பில், சென்னை, விருகம்பாக்கம், ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தபிதா பங்கேற்றார். இதையடுத்து, அந்த மாணவிக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.