/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினா நீச்சல் குளம் மீண்டும் திறப்பு
/
மெரினா நீச்சல் குளம் மீண்டும் திறப்பு
ADDED : ஏப் 02, 2022 11:09 PM
மெரினா, :கோடைக்காலம் துவங்கியதை அடுத்து, மெரினா கடற்கரை நீச்சல் குளம் மீண்டும் நேற்று திறக்கப்பட்டது.சென்னை, மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், 1ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.பராமரிப்பு பணி முடிவடையாத காரணத்தால், குறிப்பிட்ட நாளில் திறக்கப்படவில்லை.இந்த நிலையில், நேற்று நீச்சல் குளம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
கடந்த 2009ம் ஆண்டு, 70 லட்ச ரூபாயில் புனரமைக்கப்பட்ட இந்த நீச்சல் குளம், 100 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் உடையதாகும்.ஒரே நேரத்தில், 400 பேர் வரை குளிக்கலாம். உடை மாற்றுவதற்கு, 10 அறைகள், கழிப்பறை, குடிநீர், 'பார்க்கிங்' என அனைத்து வசதிகளும் உள்ளன. காலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் ஆண்கள் அனுமதிக்கப்படுவர். பெண்களுக்கு, காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரையில் அனுமதி உண்டு.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நீச்சல் குளத்தில் அதிகளவில் கூட்டம் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போன்று, வடசென்னை திருவொற்றியூர் நீச்சல் குளமும், வரும் 5ம் தேதி திறக்கப்பட உள்ளது.