/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளியின் வாழ்வியல் பேசும்'தாமரை' குறும்படம் சென்னையில் வெளியீடுமகேஷ் சார் விருப்பம்//
/
மாற்றுத்திறனாளியின் வாழ்வியல் பேசும்'தாமரை' குறும்படம் சென்னையில் வெளியீடுமகேஷ் சார் விருப்பம்//
மாற்றுத்திறனாளியின் வாழ்வியல் பேசும்'தாமரை' குறும்படம் சென்னையில் வெளியீடுமகேஷ் சார் விருப்பம்//
மாற்றுத்திறனாளியின் வாழ்வியல் பேசும்'தாமரை' குறும்படம் சென்னையில் வெளியீடுமகேஷ் சார் விருப்பம்//
ADDED : செப் 11, 2022 02:03 AM

சென்னை:'தாரை' திரைப்பட நிறுவனம் தயாரித்த, மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தையின் வாழ்வியலை சொல்லும் 'தாமரை' குறும்படம், சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.சிறப்பு குழந்தை சந்த்ரு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவனிடம் ஒப்படைக்க, அவர் வெளியிட்டார்.
தாக்கம்
பின், அமைச்சர் பேசியதாவது:மாற்றுத்திறனாளிகளிடம் அதிக அன்பும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய கடமை பெற்றோருக்கும், உறவுகளுக்கும் உண்டு என்பதை, 'தாமரை' குறும்படும் எளிதாக எடுத்துரைக்கிறது.பல பெற்றோருக்கு, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கையாள வேண்டிய திறன் குறைவாகவே உள்ளது.
வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர், தங்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கன்னியாகுமரி அழைத்து வந்து அனாதையாக விட்டுவிடுகின்றனர்; மனித மனம் மாற வேண்டும்.தமிழகத்தில் எட்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளி இல்லம் துவங்க முன்வந்துள்ளன. பெண் மாற்றுத் திறனாளியின் வலியை உணர்ந்து படம் எடுத்ததற்கு நன்றி. பலரது உள்ளத்தில், இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.
பாதுகாப்பு அரண்எழுத்தாளர் ஜெயமோகன் பேசியதாவது:நுாற்றாண்டுகளுக்கு முன், உலகத்தில் எல்லா விதிகளும் சான்றோருக்காக இருந்துள்ளது. கிரேக்க மரபில், மாற்றுத்திறனாளிகளை மலையில் இருந்து வீசி எறியும் பழக்கம் இருந்துள்ளது. சமீபத்தில் ஒரு ஆவணப்படம் பார்த்தேன்.அதில், கீரிகள் கூட்டத்தில், ஒரு கீரி பார்வை குறைபாட்டுடன் இருக்கும்.
அதை இதர கீரிகள் அரவணைத்து, பாதுகாப்பு அரணாக அழைத்து செல்லும் காட்சி நெகிழ வைத்தது.மாற்றுத்திறனாளிகளும், இந்த உலகத்தின் ஒரு பகுதி. தாமரை படத்தின் காட்சி அமைப்புகள் இயல்பாக இருந்தன. நடிகர்கள், புதுமுகமாக இருந்தாலும் தேர்ந்து நடித்துள்ளனர்; பள்ளிகளில் திரையிட வேண்டிய படம்.இவ்வாறு அவர் பேசினார்.
குறும்படத்தில் பங்கேற்ற எடிட்டர் பழனிவேல், இசையமைப்பாளர் திவாகர் சுப்பிரமணியம், ஒளிப்பதிவாளர் எஸ்.பி.மணி, திரைக்கலைஞர்கள் காயத்ரி, கலைவேல், கோவை உமா, மோகன சங்கீதா, சதீஷ்குமார், நவீன்குமார், பாரி, துாரிகா, மதுமிதா, ருக்மணி, கார்த்திக், சாமிநாதன், கிஷோர்குமார், அம்மாசேகர், அருள்முருகன், பாலபாரதி உள்ளிட்டோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், 'தாமரை' குறும்படத்தின் இயக்குனர் ரவிசுப்பிரமணியன், தயாரிப்பாளர் காமாட்சி சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.