/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வரும் 24 முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்'
/
'வரும் 24 முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்'
'வரும் 24 முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்'
'வரும் 24 முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்'
ADDED : ஜன 15, 2024 01:38 AM
கோயம்பேடு:கோயம்பேடு அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில், ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பொங்கல் சிறப்பு சந்தை, கடந்த ஆண்டிலிருந்து 7.5 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது. வரும் 17ம் தேதி வரை, இந்த சந்தை நடைபெற உள்ளது. இதுவரை, 350 கரும்பு லாரிகள், 200 மஞ்சள் லாரிகள் வந்துள்ளன.
கோயம்பேடு சந்தையை மாற்றும் திட்டம், அரசிடம் தற்போது இல்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தை முழுமையாக மாற்றம் செய்ய, ஓராண்டு ஆகும்.
மக்களிடம் கருத்து கேட்ட பின் தான், கோயம்பேடு இடம் எதற்கு பயன்படுத்தப்படும் என முடிவு எடுக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடந்தது மறியலே கிடையாது. அரசின் மீது கூற வேறு குற்றச்சாட்டுகள் இல்லை என்றதால், இது போன்று கற்பனையான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
கிளாம்பாக்கம் முதல் கோயம்பேடு வரை, எம்.டி.சி., பேருந்துகள் நேற்றைய தினம் 4,000 முறை வந்து சென்றன.
வரும், 24ம் தேதியில் இருந்து, ஆம்னி பேருந்துகள் அனைத்தும், கிளாம்பாக்கத்திலிருந்து முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பயணியர் மகிழ்ச்சியுடன் பயணிக்கும் அளவிற்கு, கிளம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.