ADDED : ஜன 03, 2025 11:54 PM
ஆன்மிகம்
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.
சீனிவாச பெருமாள் கோவில்
கவுதம் பட்டாச்சாரியார் சாற்றுமறை, காலை 5:30 மணி, ரேவதி சங்கரின் திருப்பாவை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
வாராகி வித்யா பீடம்
மார்கழி உத்ஸவ், கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.
காரணீஸ்வரர் கோவில்
மதுசூதனன் கலைச்செல்வனின் 'மூவரை வென்றான்' சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
சித்சபா மணிகூடம்
திருச்சிற்றம்பலத்தின் 'திருவெம்பாவை - பாட்டும் பொருளும்' நிகழ்ச்சி, மாலை 3:00 மணி. இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
வாராஹி சங்கம விழா
ராஜமாதங்கி, கல்யாண வாராஹி, சந்தான வாராஜி பூஜை, மாலை 4:00 மணி. திருப்பாவை மாலை 5:00 மணி. ஸ்ரீ ஆஞ்சன மாருதி பஜன் மண்டலி, மாலை 6:00 மணி. இடம்: வள்ளல் விநாயக முதலியார் பொம்மை சத்திரம், தெற்குமாடவீதி, மயிலாப்பூர்.
வைகுண்ட ஏகாதசி விழா
வேணுகோபாலன் அலங்காரம், மாலை 4:00 மணி. இடம்: அரங்கநாயகி சமேத அரங்கநாதசுவாமி கோவில், முல்லா தெரு - 79.
கோல போட்டி
மார்கழி தெய்வத் தமிழ் கலையின் 30ம் ஆண்டு விழா, துவக்க விழா, மதியம் 1:30 மணி. தெய்வீக இன்னிசை மற்றும் பெற்றோருக்கான மார்கழி கோலப் போட்டி. இடம்: ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி, முடிச்சூர் சாலை, மண்ணிவாக்கம்.
விருது வழங்கல்
மனித நேய மாமணி விருது வழங்கும் விழா, மாலை 4:00 மணி, இடம்: புரட்சித்தலைவி திருமண மண்டபம், வேளச்சேரி.